செல்போனுக்கு டேட்டா ரீசார்ஜ் செய்யாததால் தற்கொலை செய்து கொண்ட சிறுவன்..!


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 20 April 2022 4:12 PM IST (Updated: 20 April 2022 4:12 PM IST)
t-max-icont-min-icon

மத்தியப் பிரதேசத்தில் 14 வயது சிறுவன் செல்போனுக்கு தந்தை, டேட்டா ரீசார்ஜ் செய்யாததால் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

போபால்,

மத்தியப் பிரதேசத்தில் 14 வயது சிறுவன் செல்போனுக்கு தந்தை, டேட்டா ரீசார்ஜ் செய்யாததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 14 வயது சிறுவன், தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளான்.

இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிறுவன், செல்போனுக்கு அடிமையாகி இருந்ததும் செல்போனுக்கு டேட்டா ரீசார்ஜ் செய்யும்படி தந்தையை வற்புறுத்தியதும் தெரியவந்துள்ளது. அவனது தந்தை கூலித்தொழில் செய்து வந்துள்ளார். பணப்பிரச்சனை காரணமாக சிறுவனின் செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய முடியவில்லை.

இதுகுறித்து தந்தை எடுத்து கூறியும்  அதை கேட்காத சிறுவன் டேட்டா ரீசார்ஜ் செய்யாததால் தற்கொலை செய்துகொண்டுள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story