சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய குஜராத் எம்.எல்.ஏ கைது


image tweeted by @ReallySwara
x
image tweeted by @ReallySwara
தினத்தந்தி 21 April 2022 10:46 AM IST (Updated: 21 April 2022 10:46 AM IST)
t-max-icont-min-icon

சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய குற்றத்திற்காக குஜராத் எம்.எல்.ஏ கைதுசெய்யப்பட்டார்.

அகமதாபாத்,

குஜராத் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி. சுயேச்சை எம்.எல்.ஏ வான இவர், காங்கிரசுக்கு ஆதரவு அளித்து வருகிறார். இந்த நிலையில், குஜராத்தின் பலன்பூரில் உள்ள சர்க்யூட் ஹவுஸில் இருந்து அசாம் காவல்துறையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். 

சமூக ஊடகங்களில் "இரு சமூகங்களுக்கிடையில் பகைமையை பரப்பியதாக" கைது செய்யப்பட்ட இவர், இன்று காலை அசாமுக்கு விமானம் அழைத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து அவர் சமூக வலைதளத்தில் பரப்பிய பதிவுகள் நீக்கப்பட்டது. 

இரு சமூகங்களுக்கிடையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான குற்றங்களைக் கையாளும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153ஏ இன் கீழ் அவர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவர் கைது செய்யப்பட்டதை அறிந்த குஜராத் காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் தாக்கூர் மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் அகமதாபாத் விமான நிலையத்திற்கு விரைந்து வந்,து ஆளும் பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.


Next Story