ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


(Credits: PTI)
x
(Credits: PTI)
தினத்தந்தி 21 April 2022 4:20 PM IST (Updated: 21 April 2022 4:20 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் மால்வா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில் 4 ராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் ஒருவர் காயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நடந்த மோதலில், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் யூசூப் கண்ட்ரோ உள்ளிட்ட இரு பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். 

பாதுகாப்பு படையினர் மற்றும் பொது மக்களை சுட்டு கொன்றதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. அதே பகுதியில் மேலும் 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்வதாகவும் காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

Next Story