டெல்லியில் பூஸ்டர் டோஸ் இலவசம் - அரசு அறிவிப்பு
டெல்லியில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா 3-வது அலை ஓய்ந்து வந்த நிலையில் தலைநகா் டெல்லியில் திடீரென கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இதற்கிடையே இந்தியாவில் கொரோனாவின் அடுத்த அலை தாக்காமல் இருக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தனியார் ஆஸ்பத்திரிகளில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகளின் முன்னெச்சரிக்கை டோஸ் (பூஸ்டர்) செலுத்தும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் 18 வயது முதல் 59 வயதுடையோர் அரசின் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்திக்கொள்ளலாம் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.
விரைவில் டெல்லி அரசு ஆஸ்பத்திரிகளில் இதற்கான மருந்துகள் இலவசமாக வினியோகிக்கப்படும் என்றும் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சாிக்கையாக பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story