குற்றவியல் நடைமுறை சட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 April 2022 6:58 AM IST (Updated: 22 April 2022 6:58 AM IST)
t-max-icont-min-icon

பொதுநல மனுவை பரிசீலித்த ஐகோர்ட்டு, ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி, 

ஹர்ஷித் கோயல் என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் குற்றவியல் நடைமுறை (அடையாள) சட்டம் அடிப்படை உரிமைகளுக்கும், அரசமைப்பு சட்டத்திற்கும் எதிரானது. எனவே சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி [பொறுப்பு] விபின் சங்கி தலைமையிலான அமர்வு விசாரித்தது.பொதுநல மனுவை பரிசீலித்த ஐகோர்ட்டு, ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.


Next Story