டெல்லியில் மீண்டும் ஒருநாள் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது - 2 பேர் உயிரிழப்பு
டெல்லியில் இன்று 1,042- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை இறுதிக்கட்டத்தில் இருந்த நிலையில், மீண்டும் தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இது 4-வது அலைக்கான அறிகுறியா? என்றும் மக்களிடையே சந்தேகம் கிளம்பி உள்ளது.
நாட்டில் தொற்று மீண்டும் அதிகரிக்கும் மாநிலங்களில் தலைநகர் டெல்லி முக்கிய பங்கு வகிக்கிறது. அங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 1009 பேர் புதிதாக பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனர். நேற்று 965- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இன்று ஒருநாள் பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது குறித்து டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- டெல்லியில் இன்று 1,042- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 4.64 சதவிகிதமாக இருந்தது. தொற்று பாதிப்பால் மேலும் 2 -பேர் உயிரிழந்துள்ளனர்.
Related Tags :
Next Story