கர்நாடகா: 11 அடி ராஜநாகத்தை பிடித்த பாம்பு பிடி வீரர்..!
கர்நாடக மாநிலத்தில் ஊருக்குள் வந்த 11 அடி ராஜநாகத்தை பாம்பு பிடி வீரர் பிடித்து வனப்பகுதியில் விட்டார்.
கர்நாடகா:
கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு அருகே செட்டிகொப்பா கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் சுமார் 11 அடி நீளம் உள்ள ராஜநாகம் ஒன்று புகுந்துள்ளது.
இதைகண்டு பதற்றமடைந்த கிராமத்தினர் உடனடியாக பாம்பு பிடி வீரர் ஹரீந்தீரா என்பவருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து வந்த பாம்பு பிடி வீரர் ஹரீந்தீரா சர்வ சாதரணமாக 11 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டார். மேலும் இது அவர் பிடித்த 365 வது ராஜநாகம் எனவும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story