புத்தக தின விழா: நவதானியங்களால் திருவள்ளுவர் ஓவியம் - மாணவர்கள் சாதனை....!


புத்தக தின விழா: நவதானியங்களால் திருவள்ளுவர் ஓவியம் - மாணவர்கள் சாதனை....!
x
தினத்தந்தி 23 April 2022 3:45 PM IST (Updated: 23 April 2022 3:31 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் புத்தக தின விழாவை முன்னிட்டு நவதானியங்களை கொண்டு திருவள்ளுவர் ஓவியத்தை அரசு பள்ளி மாணவர்கள் வரைந்து உள்ளனர்.

காரைக்கால்,

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரில் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உலக புத்தக தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

புத்தக தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் உளுந்து, பயிறு, கொண்டக்கடலை, வேர்க்கடலை, மொச்சை உள்ளிட்ட நவதானியங்களை கொண்டு பள்ளியின் நூலகத்தில் 20 அடி நீளம் 20 அடி அகலத்தில் திருவள்ளுவர் உருவத்தை மாணவர்கள் வரைந்து சாதனை படைத்து உள்ளனர்.

இந்த ஓவியத்தை வரைந்த மாணவர்களை ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.
1 More update

Next Story