கணவனுடன் சண்டை படுக்கையில் செங்கல் சுவர் எழுப்பிய மனைவி
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டை இறுதியில் படுக்கையில் செங்கல் சுவர் எழுப்பும் நிலை வரை சென்றுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.
புதுடெல்லி
கணவனும், மனைவியும் சண்டை போட்டுக்கொள்வது இயல்பான ஒன்று தான். அவர்கள் சண்டை போட்டுக்கொண்டு இரவே சமாதானம் ஆகி விடவும் வாய்ப்புள்ளது.
ஆனால் ஒரு கணவன் மனைவி சண்டை குறித்த காட்சி சமூகவலைத்தளங்களில் பலரையும் சிரிப்பில் ஆழ்த்தியதோடு சிலர் அறிவுரையும் கூறி வருகின்றனர். இந்த காட்சியில் கணவர் பயமும் கடுப்புமாக எதுவும் பேசாமல் இருக்கும் நிலையில், மனைவி எதையும் கண்டு கொள்ளாமல் சுவர் எழுப்பவதிலேயே குறியாக இருக்கின்றார்.
பேசி தீர்ப்பதற்கு விட்டுவிட்டு இன்றைய காலத்தில் கணவன் மனைவி பிரச்சினை இவ்வாறு சுவர் எழுப்பும் நிலை வரை சென்றுவிட்டதாக பலரும் விமர்சனம் செய்து உள்ளனர்
இதனை பார்க்கும் நெட்டிசன்கள் சுவர் எழுப்புவதற்கு பதிலாக இருவரும் பேசி பிரச்சினையை தீர்க்கலாமே என்று அறிவுரை வழங்கி வருகின்றனர்.
Related Tags :
Next Story