முல்லைப் பெரியாறு மேற்பார்வைக் குழு: கூடுதல் உறுப்பினரை நியமித்தது கேரளா


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 24 April 2022 5:19 AM IST (Updated: 24 April 2022 5:19 AM IST)
t-max-icont-min-icon

முல்லைப் பெரியாறு மேற்பார்வைக் குழுவில் கூடுதல் உறுப்பினரை கேரளா அரசு நியமித்தது.

புதுடெல்லி, 

முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வைக் குழுவில் ஏற்கனவே 3 பேர் உள்ள நிலையில், கூடுதலாக 3 பேரை சேர்க்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது. ஏற்கனவே, முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வைக் குழு தலைவராக குல்சன்ராஜ் மற்றும் தமிழக கேரள அரசின் நீர்வளத்துறை செயலாளர் உள்ளனர். 

இந்நிலையில், மத்திய அரசு தரப்பில் இருந்து ஒரு தொழில்நுட்ப வல்லுனரும், தமிழகம் மற்றும் கேரளா தரப்பில் இருந்து தலா 1 தொழில்நுட்ப வல்லுனரும் கூடுதலாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்பேரில், காவிரி தொழில்நுட்பக் குழுத்தலைவர் ஆர்.சுப்பிரமணியனை தமிழக அரசின் தொழில்நுட்ப வல்லுனராக நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வைக் குழுவின் கூடுதல் உறுப்பினராக, நீர்ப்பாசன துறையின் தலைமை என்ஜீனியரான அலெக்ஸ் வர்கீசை நியமித்து கேரள அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Next Story