ஜம்முவில் குண்டு வெடிப்பு? போலீசார் ஆய்வு


ஜம்முவில் குண்டு வெடிப்பு? போலீசார் ஆய்வு
x
தினத்தந்தி 24 April 2022 3:22 AM GMT (Updated: 2022-04-24T09:00:11+05:30)

பிரதமர் மோடி இன்று காலை செல்ல உள்ள நிலையில் ஜம்மு அருகே குண்டு வெடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜம்மு,

காஷ்மீரில் ரூ.20 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். இதையொட்டி மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இந்தநிலையில்,  பிரதமர் மோடி இன்று காலை செல்ல உள்ள நிலையில் ஜம்மு அருகே குண்டு வெடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 
லாலியான் கிராம பகுதியில் வெடித்ததாக கிராம மக்கள் தகவல் அளித்ததன் பேரில் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். 

இது பயங்கரவாதத்துடன் தொடர்புடைய தாக்குதலாக தெரியவில்லை. விவரங்கள்சேகரிபட்டு வருவதாக  போலீசார் தரப்பில் கூறபப்ட்டுள்ளது. 

Next Story