தினசரி கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரிப்பு: ஒரு நாளில் 2,593 பேருக்கு பாதிப்பு


தினசரி கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரிப்பு: ஒரு நாளில் 2,593 பேருக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 24 April 2022 9:32 AM IST (Updated: 24 April 2022 9:32 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு நாளில் 2,593பேருக்கு பாதிப்பு உறுதியானது.

புதுடெல்லி,

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு தினமும் ஏறுமுகம் கண்டு வருகிறது. 

நேற்று முன் தினம் 2,451 நேற்று 2,527 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 2,593 ஆக உயர்ந்தது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,30,54,952 லிருந்து 4,30,57,545 ஆக உயர்ந்துள்ளது.   ஒரே நாளில் கொரோனாவுக்கு 44 பேர் பலியாகினர். இதுவரை 5,22,193 பேர் உயிரிழந்தனர்

இந்தியாவில் ஒரே நாளில் 1,755 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.  இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,17,724 லிருந்து 4,25,19,479 ஆக உயர்ந்துள்ளது. 

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15,079 லிருந்து 15,873 ஆக உயர்ந்தது. 

இந்தியாவில் ஒரே நாளில் 19,05,374 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  இதுவரை 187.67 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story