டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
டெல்லியில் கட்டுமான பணியில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லியின் சத்யநிகேதன் பகுதியில் பழைய கட்டிடம் ஒன்றை மறுசீரமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இதில் தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில், கட்டிடம் திடீரென இடிந்து விழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில் பணியில் இருந்த தொழிலாளர்களில் 5 பேர் சிக்கி கொண்டனர். ஒருவர் தப்பிவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்த டெல்லி தீயணைப்பு துறையினர் அந்த பகுதிக்கு உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கட்டிடம் இடிந்த செய்தியறிந்து மாவட்ட நிர்வாகத்தினரும் சென்றுள்ளனர். இதேபோன்று, தேசிய பேரிடர் பொறுப்பு படையும் மீட்பு பணிக்கு சென்றுள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்காக, பொக்லைன் எந்திரங்களை கொண்டும் கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டன. அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களும் மீட்பு பணிக்கு உதவியாக செயல்பட்டனர்.
இதுபற்றி தேசிய பேரிடர் பொறுப்பு படையை சேர்ந்த அதிகாரி கோவர்தன் பைரவா கூறும்போது, மீட்பு பணியில் எங்களுடைய படையை சேர்ந்த 25 குழுக்கள் ஈடுபட்டன. கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் 5 பேர் மீட்கப்பட்டனர்.
எனினும், அவர்களில் 2 பேர் உயிரிழந்து விட்டனர் என தெரிவித்து உள்ளார். 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்பு பணிகள் நிறைவடைந்து உள்ளன என டெல்லி தீயணைப்பு துறை தலைவர் அதுல் கார்க் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story