டெல்லியில் இன்றும் ஒருநாள் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது - ஒருவர் உயிரிழப்பு
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,011- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியி கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில தினங்களாக அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஒரு வார காலமாகவே தினசரி தொற்று பாதிப்பு சற்றேறக்குறைய ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வந்தது. தொற்று பாதிப்பு அதிகரித்தாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்த டெல்லி அரசு, கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியது.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,011- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 817- பேர் குணம் அடைந்துள்ளனர்.
தொற்று பாதிப்புக்கு ஒருவர் பலியாகியுள்ளார். கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4,168- ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 6.42 சதவிகிதமாக உள்ளது.
Related Tags :
Next Story