உலகின் 5வது பணக்கார நபரானார் கவுதம் அதானி
அதானி குழும தலைவர் கவுதம் அதானி உலகின் 5வது பணக்கார நபராகி உள்ளார் என்று போர்ப்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
உலக அளவில் பணக்காரர்களாக உள்ள நபர்களின் பட்டியலை போர்ப்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இதன்படி நடப்பு ஆண்டிற்கான பட்டியலில், அதானி குழும தலைவர் கவுதம் அதானி உலகின் 5வது பணக்கார நபராகி உள்ளார்.
91 வயது வாரன் பஃபே 12 ஆயிரத்து 170 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துகளுடன் பின்னுக்கு தள்ளப்பட்டார். அதானியின் சொத்து மதிப்பு 12 ஆயிரத்து 370 கோடி அமெரிக்க டாலராக உள்ளது.
இதனால், இந்தியாவின் மிக பெரும் பணக்காரராக அதானி உள்ளார். நாட்டின் 2வது மிக பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியை (10 ஆயிரத்து 470 கோடி அமெரிக்க டாலர்) விட ஆயிரத்து 900 கோடி அமெரிக்க டாலர் சொத்து அதானியிடம் அதிகம் உள்ளது.
இதனால், உலகில் அதானியை விட தற்போது 4 பேரே பணக்காரராக உள்ளனர். அவர்கள், மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவரான பில் கேட்ஸ் (13 ஆயிரத்து 200 கோடி அமெரிக்க டாலர்), பிரான்ஸ் நாட்டின் ஆடம்பர பொருட்கள் விற்பனையாளர் பெர்னார்ட் அர்னால்ட் (16 ஆயிரத்து 790 கோடி அமெரிக்க டாலர்), அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் (17 ஆயிரத்து 200 கோடி அமெரிக்க டாலர்), டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைவரான எலான் மஸ்க் (26 ஆயிரத்து 970 கோடி அமெரிக்க டாலர்) ஆகியோர் ஆவர்.
Related Tags :
Next Story