நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு இரண்டாம் பருவ பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு இரண்டாம் பருவ பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்!
x
தினத்தந்தி 26 April 2022 10:06 AM IST (Updated: 26 April 2022 10:06 AM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்திற்கான பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடங்குகின்றன.

புதுடெல்லி,

நாடு முழுவதும்  சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்திற்கான பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடங்குகின்றன. 

இன்று தொடங்கும் தேர்வுகள், ஜூன் 14ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். 

இன்று காலை 10.30 மணிக்கு தேர்வுகள் ஆரம்பமாகின்றன. காலை 10 மணி முதல் மாணவர்கள் தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வை 21,16,209 மாணவர்கள் எழுத உள்ளனர். சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வை 14,54,370 மாணவர்கள் எழுத உள்ளனர்.

மொத்தம் 35 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.  

Next Story