’லிப்ட்’ கொடுப்பதுபோல் கடத்தி பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை - உடலை கிணற்றில் வீசிய கொடூரம்


Image Courtesy: Reuters
x
Image Courtesy: Reuters
தினத்தந்தி 26 April 2022 11:04 AM IST (Updated: 26 April 2022 11:04 AM IST)
t-max-icont-min-icon

லிப்ட் கொடுப்பதுபோல் அழைத்து சென்று பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் 35 வயது நிரம்பிய பெண் அம்மாநிலத்தின் துஷா மாவட்டத்தில் வசித்து வரும் தனது பெற்றோர் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். ஜெய்ப்பூரில் இருந்து பஸ்சில் சென்ற அந்த பெண் துஷா மாவட்டத்திற்கு வந்தடைந்துள்லார்.

தனது பெற்றோரின் வீடு அமைந்துள்ள ஊருக்கு அந்த பெண் நடந்து சென்றுள்ளார். அப்போது, அவ்வழியே காரில் வந்த சிலர் நாங்களும் அவ்வழியாக செல்கிறோம் உங்களுக்கு ‘லிப்ட்’ தருகிறோம் என கூறியுள்ளனர். இதனை நம்பிய அந்த பெண் காரில் ஏறியுள்ளார்.

ஆனால், அந்த கும்பல் காரை ஊருக்கு வெளியே ஆள்நடமாட்டமில்லாத பகுதிக்கு ஓட்டிச்சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து அந்த பெண்ணை அந்த கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. பின்னர் அந்த பெண்ணை கொன்று உடலை அருகில் உள்ள கிணற்றில் வீசிவிட்டு காரில் தப்பியோடிவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிணற்றுக்குள் வீசப்பட்ட பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமரா உதவியுடன் காரில் வந்த கும்பலில் ஒருவனை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள எஞ்சியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

லிப்ட் கொடுப்பதுபோல் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொன்று உடலை கிணற்றில் வீசிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Next Story