6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி!


6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி!
x
தினத்தந்தி 26 April 2022 1:46 PM IST (Updated: 26 April 2022 1:50 PM IST)
t-max-icont-min-icon

சைடஸ் காடிலா, கோர்ப்வாக்ஸ் தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

புதுடெல்லி,

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை 6 முதல் 12 வயது குழந்தைகளுக்கு பயன்படுத்துவதற்கான அவசரகால அனுமதியை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு  வழங்கியுள்ளது.

கோவாக்சின் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கான அங்கீகாரத்தை  இந்திய அரசின் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு  வழங்கியுள்ளது. 

இதற்கான அனுமதியை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் துறைத் தலைவரான இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் வழங்கியுள்ளார்.

மேலும், கோவாக்சின் தடுப்பூசியின் பாதுகாப்பு தகவல்கள் மற்றும் உரிய தரவுகளை தொடர்ந்து சமர்ப்பிக்குமாறு பாரத் பயோடெக் நிறுவனத்திடம் கேட்கப்பட்டுள்ளது.

அதன் படி, முதல் இரண்டு மாதங்களுக்கு 15 நாள் இடைவெளியில் தடுப்பூசியால் ஏற்படும் விளைவுகள் பற்றிய சரியான பகுப்பாய்வு நடத்தப்பட வேண்டும்.

அதன் பிறகு, ஐந்து மாதங்களுக்கு பின்,  ஒவ்வொரு மாதமும் உரிய பகுப்பாய்வு நடத்தி பாதுகாப்பு தரவுகளை தொடர்ந்து சமர்ப்பிக்குமாறு பாரத் பயோடெக் நிறுவனத்திடம் கேட்கப்பட்டுள்ளது.

இது தவிர, மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு மருந்து கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் அளித்துள்ளார். 

5-12 வயதுக்குட்பட்டவர்களுக்கு, கோர்ப்வாக்ஸ் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கான அங்கீகாரத்தை  இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் வழங்கியுள்ளார்.

18 வயதுக்கு பூர்த்தி அடைந்தவர்களுக்கு, சைடஸ் காடிலாவின் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கான அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளார்.

Next Story