அனுமன் ஜெயந்தியின் போது நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரிக்க கோரிய மனு - சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி


அனுமன் ஜெயந்தியின் போது நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரிக்க கோரிய மனு - சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி
x
தினத்தந்தி 26 April 2022 9:08 AM GMT (Updated: 26 April 2022 9:08 AM GMT)

“முன்னாள் தலைமை நீதிபதிகள் யாராவது பணி இல்லாமல் இருக்கிறார்களா?” என மனுதாரரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

புதுடெல்லி,

ராம நவமி, அனுமன் ஜெயந்தியின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி நாகேஷ்வரராவ் தலைமையிலான அமர்வு விசாரித்தது. 

அப்போது விசாரணை பாரபட்சமாக நடைபெற்று வருவதாக வழக்கறிஞர் விஷால் திவாரி குற்றம் சாட்டினார். இதையடுத்து பேசிய நீதிபதிகள், முன்னாள் தலைமை நீதிபதிகள் யாராவது பணி இல்லாமல் இருக்கிறார்களா? எனவும் எது மாதிரியான கோரிக்கைகளை நீங்கள் முன்வைக்கிறீர்கள்? எனவும் கேள்வி எழுப்பி மனுவை தள்ளுபடி செய்தனர். 

Next Story