கேரளா: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு 50 ஆண்டு சிறை..!
கேரளாவில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆக்கிய நபருக்கு 50 ஆண்டு சிறை தண்டனையும் 7 லட்சம் அபராதமும் வழங்கி போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
பாலக்காடு:
திருச்சூர் மாவட்டம், சாலக்கடிகுடி பகுதியில் வசிப்பவர் ஷிஜு (வயது 43). இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பட்டாம்பி பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது 16 வயது சிறுமியை கர்பமாக்கி விட்டு தலைமறைவானார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் பட்டாம்பி போலீசில் புகார் கொடுத்தார்கள். புகாரை பதிவு செய்த போலீசார் ஷிஜுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து விசாரணை நடத்தி வந்தார்கள்.
இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று பட்டாம்பி விரைவு போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி சதீஷ் குமார் தனது தீர்ப்பில் சிறுமியை கற்பமாக்கிய ஷிஜுவிற்க்கு 50 ஆண்டு சிறை தண்டனையும் 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்படுகிறது என கூறினார். தொடர்ந்து போலீசார் ஷிஜுவை பட்டாபி சிறைச்சாலையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story