கேரளா: கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பலி


கேரளா: கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பலி
x
தினத்தந்தி 27 April 2022 9:02 AM IST (Updated: 27 April 2022 9:02 AM IST)
t-max-icont-min-icon

ஆலப்புழா அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பலியாகியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேரளா:

கேரள மாநிலம், திருவனந்தபுரம் பகுதியில் உள்ளது நெடுமங்காடு. இங்கு வசிப்பவர் ஷைஜு (வயது 34). இவரின் மூன்று நண்பர்களுடன் திருவனந்தபுரத்திலிருந்து கொச்சி விமான நிலையத்திற்கு காரில் வந்து கொண்டிருந்தார்கள். 

இவர்கள் வந்த கார் இன்று அதிகாலை 4 மணியளவில் ஆலப்புழா அருகே உள்ள பாயல் குளங்கரை என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. 

அப்போது எதிரே வந்த லாரி ஒன்று கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோதிய வேகத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கி 4 பேரும் காருக்குள்ளேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்து போனார்கள். 

விவரமறிந்த அம்பலப்புழா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காரில் இறந்து கிடந்த 4 பேரின் உடலையும் ஆழப்புழா அரசு மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கார் விபத்துக்கு காரணம் டிரைவர் தூங்கியதே என போலீசார் தெரிவித்தார்கள். லாரி டிரைவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இறந்துபோன மற்ற மூன்று நண்பர்களுடைய விவரங்கள் இதுவரை தெரியவில்லை அம்பலபுழ போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story