பேரறிவாளனை ஏன் விடுதலை செய்யக்கூடாது? - சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
பேரறிவாளனை ஏன் விடுதலை செய்யக்கூடாது? என சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தற்போது ஜாமினில் உள்ள பேரறிவாளன் தன்னை முன்கூட்டியே விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி நாகேஷ்வரராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
குறிப்பாக இந்த வழக்கு கடந்து வந்த பாதையை பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இந்த விவகாரத்தில் ஏன் தமிழக அரசு ஒரு முடிவெடுத்து பேரறிவாளனை விடுவிக்கக்கூடாது? என்ற கேள்வியை முன்வைத்தனர்.
இதை தொடர்ந்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் முடிவெடுக்க ஜனாதிபதிக்கே அதிகாரம் உள்ளது என்றும் கவர்னருக்கு உள்ள அதிகாரம் வெறும் குறைந்தபட்ச அதிகாரம் தான் என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக, கவர்னர் முடிவெடுக்காத விவகாரத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பது கூட்டாட்சி முறைக்கு தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்துகிறது.
கவர்னருக்கு அதிகாரம் இருக்கும்போது அவர்தானே முடிவு எடுத்திருக்க வேண்டும்? கவர்னருக்கு அதிகாரம் இல்லாத விவகாரத்தில் ஜனாதிபதிக்கு அனுப்பவதை தவிர அவருக்கு வேறு வழி இல்லை என்ற மத்திய அரசின் வாதத்தையும் நீதிபதிகள் பரீசிலித்து வருகின்றனர்.
மொத்தத்தில் இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டே முடிவு எடுக்கக்கூடாது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கை வரும் செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் ஜனாதிபதி விரைவில் முடிவெடுப்பார் என மத்திய அரசு தெரிவித்திருந்தாலும் சுப்ரீம் கோர்ட்டிற்கு உள்ள பிரத்யேக அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டே விடுவிக்குமா? அல்லது மத்திய அரசின் வாதத்தை ஏற்று இந்த விவகாரத்தில் முடிவெடுக்குமா? என்று விரைவில் தெரியவரும்.
கவர்னருக்கு அதிகாரம் உள்ளது என தெள்ளத்தெளிவாக தெரிவித்த பின்னர் முடிவெடுக்கும் விவகாரத்தை கவர்னர் ஏன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்? என மத்திய அரசு வழக்கறிஞரிடம் சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது.
இதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர், கவர்னர் முடிவெடுக்காத விவகாரத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பது அரசியலமைப்பு சாசனம் வழங்கியுள்ள நடைமுறை. இந்த விவகாரத்தில் ஜனாதிபதி விரைவில் முடிவெடுப்பார்’ என்றார்.
36 ஆண்டுகளாக சிறையில் உள்ள நபரை வேறு நபர்களுடன் ஒப்பிடுவீர்களா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இந்த விவகாரத்தில் ஜனாதிபதி என்ன முடிவு எடுக்க வேண்டியுள்ளது. எந்த விதிகளின்படி கவர்னர் முடிவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் நாங்களே ஒரு உத்தரவை பிறப்பிக்கக்கூடாது? என சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பினர். சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சானன அமர்வு தீர்ப்பின் படி 7 பேர் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவையே முடிவெடுக்கலாம். அமைச்சரவை முடிவுக்கு எதிராக கவர்னர் சென்றால் அது கூட்டாட்சி அமைப்பில் மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும்.
பேரறிவாளன் விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது என ஏற்கனவே தெளிவாகிவிட்டது. இந்த விவகாரத்தில் கவர்னரை மத்திய அரசு கொண்டு வர வேண்டாம். பேரறிவாளனை விடுவிப்பது மட்டுமே இந்த வழக்கை முடித்துவைக்க ஒரே தீர்வு என நினைக்கிறோம்.
யார் விடுவிக்க வேண்டும் என்பதில் உள்ள சிக்கல்களில் பேரறிவாளன் ஏன் சிக்க வேண்டும்? என சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. பேரறிவாளனை ஏன் கோர்ட்டே விடுவிக்கக்கூடாது? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது.
கவர்னர், ஜனாதிபதி அதிகாரம் குறித்த விஷயத்திற்குள் போகாமல் நாங்கள் ஏன் உத்தரவிடக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story