தமிழ்நாடு பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்கவில்லை - பிரதமர் மோடி
தமிழ்நாடு வாட் வரியை குறைக்கவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
தமிழ்நாடு வாட் வரியை குறைக்கவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மாநில முதல்-மந்திரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-
“எரிபொருள் மீதான வரியை 2021 நவம்பர் மாதமே மத்திய அரசு குறைத்து விட்டது. பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரியை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் குறைக்க வேண்டும். வரியை குறைத்து அதன் பலனை மக்களுக்கு மாநில அரசுகள் கொடுக்க வேண்டும்.
தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள் மத்திய அரசின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்கவில்லை. மத்திய அரசுக்கு செவி கொடுக்காத மாநில மக்கள் தொடர்ந்து சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
மராட்டியம், தெலுங்கானா, மேற்குவங்கம், ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் சில காரணங்களால் அதை கேட்கவில்லை.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.111க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மாநிலங்கள் பெட்ரோல் - டீசல் விலை மற்றும் வாட் வரியை குறைக்க வேண்டும்.
வாட் வரியை குறைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு உதவியாக இருக்கும்.பொருளாதார முடிவுகளில் மத்திய, மாநில அரசுகள் இடையேயான ஒத்துழைப்பு மிக அவசியம்” என கூறினார்.
Related Tags :
Next Story