நாளை அசாம் செல்கிறார் பிரதமர் மோடி


Image Courtesy : PTI
x
Image Courtesy : PTI
தினத்தந்தி 27 April 2022 3:23 PM IST (Updated: 27 April 2022 3:23 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி, நாளை அசாம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரதமர்  மோடி, நாளை அசாம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம் செல்லும் பிரதமர் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் நடைபெறும் அமைதி, ஒற்றுமை மற்றும் வளர்ச்சிப் பேரணியில் உரையாற்றுவார் என்றும், நிகழ்ச்சியின் போது கல்வித்துறை சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், 2 மணியளவில் திப்ருகரில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரிக்கு செல்லும் பிரதமர், திப்ருகர் புற்றுநோய் மருத்துவமனையை மக்கள் சேவைக்கு அர்ப்பணிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதையடுத்து 3 மணி அளவில் கானிக்கர் திடலில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர், மேலும் 6 புற்றுநோய் மருத்துவமனைகளை நாட்டுக்கு அர்ப்ப்பார் என்றும், 7 புதிய புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story