உர மானியத்திற்காக ரூ60,939 கோடி வழங்கி அமைச்சரவை ஒப்புதல்
உர மானியத்திற்காக ரூ 60,939 கோடி வழங்கி அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக மத்திய மந்திரி அனுராக் தாகூர் தகவல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
2020-21-ஆம் ஆண்டில் ரூ.512 ஆக இருந்த டி.ஏ.பி. உர மானியம், 2021-22-ல் ரூ.1,650 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.2,501-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, உரங்களுக்கான மானியத்தை உயர்த்தி ரூ.60,939.23 கோடியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் ரூ.4,526 கோடியில் 540 மெகாவாட் நீர்மின் நிலையம் அமைக்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், நக்சல் பாதிப்புள்ள இடங்களில் 2ஜி சேவையில் இருந்து 4ஜி சேவை வழங்க ரூ.1,840 கோடியில் கட்டமைப்பு ஏற்படுத்தப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
Related Tags :
Next Story