பிரதமர் மோடி இன்று அசாம் பயணம் - ரூ.500 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்..!
பிரதமர் மோடி, அசாமில் இன்று பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
திஸ்பூர்,
பிரதமர் மோடி, இன்று அசாம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அசாமில் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் நடைபெறும் அமைதி, ஒற்றுமை மற்றும் வளர்ச்சிப் பேரணியில் பிரதமர் உரையாற்றுகிறார். அந்த நிகழ்ச்சியின் போது கல்வித்துறை சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார்.
500 கோடி மதிப்பிலான கால்நடை மருத்துவக் கல்லூரி, பட்டக் கல்லூரி, மற்றும் விவசாயக் கல்லூரி ஆகியவற்றுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர், மதியம் 2 மணியளவில் திப்ருகரில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரிக்கு செல்லும் பிரதமர், திப்ருகர் புற்றுநோய் மருத்துவமனையை மக்கள் சேவைக்கு அர்ப்பணிக்க இருக்கிறார்.
அதையடுத்து 3 மணி அளவில் கானிக்கர் திடலில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர், மேலும் 6 புற்றுநோய் மருத்துவமனைகளை நாட்டுக்கு அர்ப்பணித்து, 7 புதிய புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டுவார்.
Related Tags :
Next Story