ஊரடங்கில் பாதுகாப்பற்ற முறையால் வந்த வினை: 85,000 பேருக்கு எச்.ஐ.வி - அதிர்ச்சி ரிப்போர்ட்
ஊரடங்கில் பாதுகாப்பற்ற முறையால் வந்த வினை: 85,000 பேருக்கு எச்.ஐ.வி - அதிர்ச்சி ரிப்போர்ட்
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி கொரோனா வைரஸை தடுக்கும் விதமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தது.
இந்த நிலையில் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் பாதுகாப்பற்ற உடலுறவு காரணமாக 85 ஆயிரம் பேருக்கு எய்ட்ஸ் நோய் தொற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர் என்பவர் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பிடம் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்களை பெற்றுள்ளார்.
அதன்படி 2020-21 ஆம் ஆண்டில் பாதுகாப்பற்ற பாலியல் உறவுகள் காரணமாக இந்தியா முழுவதும் 85,268 பேருக்கு எச்ஐவி வழக்குகள் பதிவாகியுள்ளது.
இந்த பட்டியலில் முதலிடத்தில் மராட்டியம் மாநிலமும், ஆந்திர மாநிலம் இரண்டாவது இடத்திலும், கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் அடுத்த மூன்று இடங்களில் உள்ளது.
2019-20ல் 1.44 லட்சமாக இருந்த எச்.ஐ.வி பாதிப்பு, 2020-21 ஆம் ஆண்டில் 85 ஆயிரமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தரவுகளின்படி, 2011-12 முதல் 2020-21 வரை பாதுகாப்பற்ற பாலியல் செயல்பாடு காரணமாக பதிவான எச்.ஐ.விபாதிப்பு எண்ணிக்கையில் நிலையான சரிவு காணப்பட்டது. 2011-12-ம் ஆண்டில், 2.4 லட்சமாக இருந்த இந்த எண்ணிக்கை, 2019-20ல் 1.44 லட்சமாகவும், 2020-21ல் 85,268 ஆகவும் குறைந்துள்ளது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஒரு பிரிவான தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் (NACP), இந்தியாவில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஒரு விரிவான திட்டமாக 1992 இல் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story