கூகுள், டுவிட்டர், பேஸ்புக் நிர்வாகிகளுக்கு சம்மன்..! - நாடாளுமன்ற நிலைக்குழு முடிவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 April 2022 1:29 AM IST (Updated: 29 April 2022 1:29 AM IST)
t-max-icont-min-icon

கூகுள், டுவிட்டர், பேஸ்புக் நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்ப நாடாளுமன்ற நிலைக்குழு முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி, 

நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. குழுவின் தலைவரான பா.ஜனதா எம்.பி. ஜெயந்த் சின்கா தலைமை தாங்கினார். இந்திய போட்டி ஆணையத்தின் பிரதிநிதிகள் பங்கேற்று சில கருத்துகளை முன்வைத்தனர். 

கூகுள், பேஸ்புக், வாட்ஸ்-அப், டுவிட்டர், ஆப்பிள், அமேசான், பிளிப்கார்ட், மேக்மைடிரிப்-கோய்பிபோ, ஸ்விக்கி, சொமட்டோ ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்கள், போட்டி சட்டத்தை மீறி நடந்து கொண்டதாக புகார்கள் வந்ததாகவும், அவை குறித்து விசாரிக்க தனிப்பிரிவு அமைத்துள்ளதாகவும் அவர்கள் கூறினர். இதற்காக போட்டி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள புதிய மசோதா கொண்டுவர உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

இதையடுத்து, இந்த பிரச்சினை குறித்து நிலைக்குழு விரிவாக விவாதித்தது. பின்னர், கூகுள், பேஸ்புக், டுவிட்டர், அமேசான், ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ‘சம்மன்’ அனுப்ப முடிவு செய்யப்பட்டது. மே 12-ந்தேதி நடக்கும் அடுத்த கூட்டத்தில் அந்நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆஜராவார்கள் என்று ஜெயந்த் சின்கா கூறினார்.

Next Story