தினசரி கொரோனா பாதிப்பு 3,377 ஆக உயர்வு: 60 பேர் தொற்றால் பலி


(Credits: PTI)
x
(Credits: PTI)
தினத்தந்தி 29 April 2022 9:09 AM IST (Updated: 29 April 2022 9:09 AM IST)
t-max-icont-min-icon

தினசரி கொரோனா பாதிப்பு 3,377 ஆக உயர்ந்தது. கொரோனா தொற்றால் 60 பேர் பலியாகினர்.

புதுடெல்லி,

தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்கிறது.  நேற்று முன் தினம் 2,927  நேற்று 3,303 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 3,377 ஆக அதிகரித்தது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,30,68,799 லிருந்து 4,30,72,176 ஆக உயர்ந்துள்ளது.  இந்தியாவில் ஒரே நாளில் 2,496 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 

இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,28,128 லிருந்து 4,25,30,622 ஆக உயர்ந்துள்ளது.  நாடு முழுவதும் 17,801 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது.  நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16,980 லிருந்து 17,801 ஆனது. இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5,23,753 ஆக உயர்ந்தது.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம்  காலையில் வெளியிட்டது.

Next Story