வட இந்தியாவில் சுட்டெரிக்கும் வெயில்; காரின் பேனட்டில் சப்பாத்தி சுடும் வீடியோ
ஒடிசாவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.
புதுடெல்லி
இந்தியாவில் அக்னி நட்சத்திர காலம் ஆரம்பிக்கப் போகிறது. மே 4ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிறது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் அனல் காற்று வீச ஆரம்பித்து விட்டது.
வட இந்தியாவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. 110 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. சாலைகளிலேயே ஆம்லேட் போடும் அளவிற்கு வெயில் அடிக்கிறது. வெப்ப நிலை அதிகரித்துள்ள தால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
அடுத்த மூன்று நாட்களில் வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை சுமார் 2 டிகிரி செல்சியஸ் உயரும் என்றும், அதன்பிறகு அடுத்த இரண்டு நாட்களுக்கு சுமார் 2 டிகிரி செல்சியஸ் குறையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான், டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ஒடிசாவில் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஏப்ரலில் ஏற்பட்ட மிக நீண்ட வெப்ப அலை இதுவாகும் என்பதால் டெல்லிக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.
இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஒடிசாவை சேர்ந்த பெண் ஒருவர் காரின் பேனட்டில் சப்பாத்தில் சுடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் வீடியோ எங்கு எடுக்கபட்டது என இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஒரு பெண் காரின் பேனட்டில் மாவை உருட்டி சப்பாத்தி சுடுகிறார். அருகில் பெண் ஒருவர் நிற்கிறார்.மேலும் சில நிமிடங்களில், சப்பாத்தி தயாராகி விடுகிறது.
இந்த வீடியோவை இந்த வீடியோவை 10 வயது பிரபல காலநிலை ஆர்வலர் லிசிப்ரியா கங்குஜம் மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் நிலமாதப் பாண்டா ஆகியோர் பகிர்ந்துள்ளனர்.
டுவிட்டரில் பலர் இந்த வீடியோ கற்பனையாக எடுக்கபட்டது என்று நம்புகிறார்கள், பெரும்பாலானவர்கள் இது மக்களுக்கு நகைச்சுவையாக எடுக்கபட்டது. இது காலநிலை மாற்றத்தால் உயரும் வெப்பநிலையை காட்ட எடுக்கபட்டது என்று நம்புகிறார்கள்.
Congratulations India!
— Licypriya Kangujam (@LicypriyaK) April 25, 2022
Finally we can make roti on car bonnet.#Heatwave#ClimateCrisispic.twitter.com/uVu5Nqas8t
Related Tags :
Next Story