"இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழியா? மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும் - மம்தா பானர்ஜி


இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழியா?  மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும் - மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 29 April 2022 6:18 AM GMT (Updated: 29 April 2022 6:18 AM GMT)

இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழியா என்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும் என மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

கொல்கத்தா,

டெல்லியில் கடந்த  ஏப்ரல் 7-ம் தேதி  நடைபெற்ற நாடாளுமன்ற அதிகாரப்பூர்வ அலுவல் மொழி ஆணையத்தின் 37வது கூட்டத்தில் பேசிய அமித் ஷா, நாட்டில் ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை மக்கள் ஏற்க வேண்டும் என மத்திய உள்துறை  மந்திரி அமித் ஷா தெரிவித்திருந்தார்.

அப்போதே இதற்கு பலர் எதிர்ப்பு எழுந்தது.  தற்போது பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் நடிகர் கிச்சா சுதீப் இடையே  டுவிட்டரில் இந்தி மொழி குறித்த விவாதம் ஏற்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் இந்தி மொழி குறித்த கருத்துகள் பரவலாக தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, 'நமது நாடு பல்வேறு மொழிகளைக் கொண்ட பரந்த நாடு. இதைப் பற்றி நான் எதுவும் இப்போது சொல்லப் போவதில்லை, ஏனெனில் நான் மற்ற முதல்-மந்திரிகளுடன் இதுகுறித்து விவாதிக்க வேண்டும். அவர்களுடன் விவாதித்து ஒரு கூட்டு முடிவு எடுக்கப்படும்.

மேலும் இந்தி தேசிய மொழியா? என்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும்' என்றும் கூறியுள்ளார்.

Next Story