ராணுவத்தின் புதிய துணைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் பகவல்லி சோமசேகர் ராஜு நியமனம்


ராணுவத்தின் புதிய துணைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் பகவல்லி சோமசேகர் ராஜு நியமனம்
x
தினத்தந்தி 29 April 2022 10:15 PM IST (Updated: 29 April 2022 10:15 PM IST)
t-max-icont-min-icon

ராணுவத்தின் புதிய துணைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் பகவல்லி சோமசேகர் ராஜு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


புதுடெல்லி,

தற்போதைய ராணுவத் தலைமை தளபதி எம்.எம்.நரவனேவின் பதவிக் காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டேவை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. 

இந்த நிலையில், ராணுவத்தின் அடுத்த துணைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் பகவல்லி சோமசேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் மே 1-ம் தேதி பதவியேற்பார் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது


Next Story