தெலுங்கானா: அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 4 பேர் பலி


தெலுங்கானா: அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 4 பேர் பலி
x
தினத்தந்தி 30 April 2022 1:14 AM IST (Updated: 30 April 2022 1:14 AM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானாவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் யாடாட்ரி புவனகிரி மாவட்டம் யாடகிரிகுடா பகுதியில் 2 அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இதில், பல வணிக வளாகங்கள் உள்ளன.

இந்நிலையில், அந்த கட்டிடத்தின் மேற்பகுதி நேற்று இரவு திடீரென இடிந்து விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு, மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story