பிற நாடுகளில் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி அங்கீகாரத்துக்கு மத்திய அரசு நடவடிக்கை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 30 April 2022 6:24 AM IST (Updated: 30 April 2022 6:24 AM IST)
t-max-icont-min-icon

பிற நாடுகளில் கோர்பேவாக்ஸ் தடுப்பூசியின் அங்கீகாரத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

புதுடெல்லி, 

இந்தியாவில் பயாலஜிக்கல்-இ நிறுவனத்தார் கொரோனாவுக்கு எதிராக கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர்.இங்கு இந்த தடுப்பூசி 12 முதல் 14 வயது வரையிலானோருக்கு செலுத்தப்படுகிறது. 

உலக சுகாதார அமைப்பின் அவசர பயன்பாட்டு பட்டியலில் இந்த தடுப்பூசியை இடம் பெறச்செய்வதற்கு பயாலஜிக்கல்-இ நிறுவனத்தார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த தருணத்தில் இந்த தடுப்பூசியை பிற நாடுகள் அங்கீகரிப்பதற்கான செயல்முறையை விரைவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக கொரோனா தடுப்பூசிகளுக்கான உயர் அதிகாரம் அளிக்கப்பட்ட குழு 5-ன் உறுப்பினர்களுக்கு உள் ஆவணங்கள் சுழற்சிக்கு விடப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


Next Story