சொந்தமாக ‘பார்முலா 1’ காரை உருவாக்கி பால் விற்பனை செய்யும் பால்காரர்- வைரலாகும் வீடியோ
ஆனந்த் மஹிந்திராவை வீடியோவைப் பார்த்து அவருக்கு ஒரு காரை பரிசளிக்குமாறு இணையவாசிகள் பரிந்துரைக்கின்றனர்.
புதுடெல்லி:
புதிதாக ஒன்றை உருவாக்கும் விஷயத்தில் இந்தியாவில் உள்ளவர்கள் மிகவும் புதுமையானவர்கள். கடந்த காலங்களில், வீட்டில் பலர் வாகனம் தயாரித்து இருந்ப்பதை நாம் பார்த்திருக்கிறோம். இருப்பினும், இந்த முறை ஒரு நபர் பார்முலா 1 போல தோற்றமளிக்கும் நான்கு சக்கர வாகனத்தை உருவாக்கும் வீடியோவில் வைரலாகி உள்ளார்.
அவர் ஒரு பால் வியாபாரி, பால் விநியோகிக்க அவர் சொந்தமாக ‘பார்முலா 1’ காரை உருவாக்கி உள்ளார்; அவருக்கு உதவுமாறு இணையவாசிகள் ஆனந்த் மஹிந்திராவிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
அந்த நபர் தனது பார்முலா 1 காரை பயன்படுத்தி கேன்களில் நிரப்பப்பட்ட பாலை விநியோகம் செய்கிறார்.
வைரலான இந்த் வீடியோ , காரில் வந்துகொண்டிருந்த போது பதிவுசெய்யப்பட்டதாகத் தெரிகிறது.அந்த வீடியோவில் பால் விநியோகிப்பவர் ஜீன்ஸ், கருப்பு ஜாக்கெட், ஹெல்மெட் அணிந்து வாகனத்தை ஓட்டிச் செல்வதைக் காணலாம். அந்த நபர் தனது வாகனத்தில் காரின் சக்கரங்களைப் பயன்படுத்தி உள்ளார்.
இந்த் வீடியோவை ரோட்ஸ் ஆஃப் மும்பை டுவிட்டரில் பகிர்ந்துள்ளது, நீங்கள் பார்முலா 1 டிரைவராக ஆக விரும்பலாம் ஆனால் பால் வியாபாரம் செய்ய குடும்பம் வலியுறுத்துகிறது.
இந்த வீடியோ இதுவரை 550 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. இது 1,322 ரீவீட்கள், 172 மேற்கோள்கள் மற்றும் 9 ஆயிரம் லைக்களை பெற்று உள்ளது.
மூக ஊடக தளத்தில் சில பயனர்கள் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவை வீடியோவைப் பார்த்து அவருக்கு ஒரு காரை பரிசளிக்குமாறு பரிந்துரைக்கின்றனர்.
When you want to become a F1 driver, but the family insists in helping the dairy business 👇😜 pic.twitter.com/7xVQRvGKVb
— Roads of Mumbai 🇮🇳 (@RoadsOfMumbai) April 28, 2022
Related Tags :
Next Story