கேரளாவில் அரசு பஸ், கார், ஆட்டோ கட்டணம் உயர்வு..!
கேரளாவில் அரசு பஸ், கார், ஆட்டோ உள்ளிட்டவற்றின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
திருவனந்தபுரம்,
நாடுமுழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாக கேரளாவில் அரசு பஸ், கார், ஆட்டோ உள்ளிட்டவற்றின் கட்டணங்களை உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.
இதனையடுத்து கேரளாவில் அரசு பஸ், கார், ஆட்டோ உள்ளிட்டவற்றின் கட்டணத்தை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதன்படி கேரள அரசு பஸ், கார், ஆட்டோ உள்ளிட்டவற்றின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.
இதனிடையே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தமிழக அரசு பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வழித்தடத்தில் கேரள அரசு பஸ் கட்டணத்தை 73 ரூபாயிலிருந்து 76-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசு பஸ்களிலும் அதே கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story