அசாமில் மெத்தனால் கலந்த பெட்ரோல் அறிமுகம் இறக்குமதியை குறைக்க நடவடிக்கை


அசாமில் மெத்தனால் கலந்த பெட்ரோல் அறிமுகம் இறக்குமதியை குறைக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 1 May 2022 11:35 PM IST (Updated: 1 May 2022 11:35 PM IST)
t-max-icont-min-icon

அசாம் மாநிலம் டின்சுகியா மாவட்டத்தில், பெட்ரோலியத்துறை இணை மந்திரி ராமேஸ்வர் டேலி இதை அறிமுகப்படுத்தினார்.


கவுகாத்தி, 

15 சதவீதம் மெத்தனால் கலக்கப்பட்ட ‘எம்15 பெட்ரோல்’ என்ற பெட்ரோலை இந்திய எண்ணெய் கழகம் (ஐ.ஓ.சி.) பரிசோதனை முயற்சியாக நேற்று அறிமுகம் செய்தது. அசாம் மாநிலம் டின்சுகியா மாவட்டத்தில், பெட்ரோலியத்துறை இணை மந்திரி ராமேஸ்வர் டேலி இதை அறிமுகப்படுத்தினார். ஐ.ஓ.சி. தலைவர் வைத்யா, நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், ராமேஸ்வர் டேலி பேசுகையில், ‘‘எரிபொருள் தன்னிறைவை நோக்கியும், பெட்ரோல் இறக்குமதியை குறைக்கவும் இது முதல்படி ஆகும். பெட்ரோலில் மெத்தனால் கலப்பதால், பெட்ரோல் விலை உயர்வில் இருந்து தப்பிக்கலாம்’’ என்றார்.

Next Story