இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் மருத்துவ படிப்பில் சேர வேண்டாம் தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்
இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் மருத்துவ படிப்பில் சேர வேண்டாம் தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்
புதுடெல்லி,
இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் உள்ள கல்லூரிகள் அல்லது கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டாம் எனவும், அங்கு பெறும் பட்டம் இந்தியாவில் செல்லுபடியாகாது எனவும் பல்கலைக்கழக மானிய குழு மற்றும் அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அண்மையில் அறிவித்தன.
அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானில் மருத்துவ படிப்பில் சேர வேண்டாம் என இந்திய மாணவர்களை தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “பாகிஸ்தானின் எந்தவொரு மருத்துவக் கல்லூரியிலும் எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ். அல்லது அதற்கு இணையான மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் எந்தவொரு இந்திய பிரஜையும், வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்தியாவில் கல்வித் தகுதிகளின் அடிப்படையில் (எந்தப் பாடத்திலும்), வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கான தேர்வை எழுதவோ அல்லது வேலை தேடவோ தகுதி பெற மாட்டார்கள்” என கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story