5 முதல் 12 வயது வரை உள்ள சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி: மே 4-ம் தேதி ஆய்வு
கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் பேராயுதங்களாக பார்க்கப்படுகின்றன.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாடு தீவிரமாக போராடி வருகிறது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் பேராயுதங்களாக பார்க்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு ஜனவரி 16-ந் தேதி முதல் இந்தியாவில் உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம் செயல்படத்தொடங்கி பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளுக்கு கடந்த மார்ச் 16-ந் தேதி) முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் 5 முதல் 12 வயது வரை உள்ள சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மே 4-ம் தேதி ஆய்வு நடத்தப்பட உள்ளதாக தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வுக்கு பிறகு சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related Tags :
Next Story