வீட்டில் இருந்து மட்டுமே ரம்ஜான் தொழுகை நடத்த வேண்டும்! மத்திய பிரதேச அரசு உத்தரவு
ராம நவமி ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக ரம்ஜானையொட்டி இன்றும், நாளையும் 2 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் ஏற்பட்ட வன்முறை காரணமாக ரம்ஜானையொட்டி இன்றும், நாளையும் 2 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வீட்டில் இருந்து மட்டுமே ரம்ஜான் தொழுகை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் ஏப்ரல் 10ம் தேதி நடந்த ராம நவமி ஊர்வலத்தில் பயங்கர வன்முறை வெடித்தது. இதில் 24 பேர் காயமடைந்தனர். ஒருவர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்.பி சித்தார்த்த சவுத்ரி துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில் அவர் காயமடைந்தார்.
இந்த வன்முறையை தொடர்ந்து தான் ரம்ஜான், அட்சய திருதியை கொண்டாட்டங்களை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டது. மேலும் ஒவ்வொரு மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், கலெக்டர், எஸ்பி ஆகியோர் கண்காணிப்பு பணியை தீவிரமாக்க வேண்டும் என அம்மாநில முதல் மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி ரம்ஜான் பண்டிகையையொட்டி கார்கோனில் 2 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்மூலம் கார்கோனில் பொது இடங்களில் தொழுகை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
கார்கோனில் ஏப்ரல் 10ல் ராமநவமி ஜெயந்தியில் வன்முறை வெடித்த பிறகு மாநில அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி அம்பேத்கர் ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி மற்றும் அனுமன் ஜெயந்தி கொண்டாட்டங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தற்போது ரம்ஜான் பண்டிகையையொட்டி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story