பரபரப்பாக இயங்கிய விமான நிலையங்கள் பட்டியல்: உலகிலேயே 2-வது இடத்தில் டெல்லி விமான நிலையம்
அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையம், 44 லட்சத்து 20 ஆயிரம் இருக்கைகளை கையாண்டு, உலக அளவில் முதலிடத்தை தக்க வைத்துள்ளது.
புதுடெல்லி,
கடந்த மார்ச் மாதத்தில், உலக அளவில் பரபரப்பாக இயங்கிய விமான நிலையங்கள் பட்டியலை, சர்வதேச பயண விவரங்களை அளிக்கும் ஓ.ஏ.ஜி. என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. உள்நாட்டு, சர்வதேச விமானங்களை கையாண்ட வகையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதில், அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையம், 44 லட்சத்து 20 ஆயிரம் இருக்கைகளை கையாண்டு, உலக அளவில் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. டெல்லி விமான நிலையம், 36 லட்சத்து 10 ஆயிரம் இருக்கைகளை கையாண்டு, 2-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், டெல்லி 3-ம் இடத்தில் இருந்தது.துபாய் விமான நிலையம், 35 லட்சத்து 50 ஆயிரம் இருக்கைகளை கையாண்டு, 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
Related Tags :
Next Story