மக்கள் கவலைப்படும் வகையில் எனது ஆட்சி அமையாது - ரமலான் தொழுகை கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேச்சு
பானர்ஜி அங்கு கூடியிருந்த மக்களை பார்த்து பயப்பட வேண்டாம், ஆனால் ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக ஒன்றுபடுமாறு கேட்டுக் கொண்டார்.
கொல்கத்தா,
கொல்கத்தாவில் உள்ள ரெட் ரோட்டில் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, இன்று காலை பெருமளவிலான மக்கள் ரமலான் பண்டிகையையொட்டி தொழுகை நடத்தினர்.
அங்கு இன்று காலை இடி மின்னலுடன் மழை பெய்து சாலையில் தண்ணீர் ஓடியபோதும் அதனை பொருட்படுத்தாமல் தொழுகை நடத்தினர்.
மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி ரெட் ரோட்டில் ஈத் தொழுகைக்காக சுமார் 14,000 பேர் கூடியிருந்த கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
பானர்ஜி அங்கு கூடியிருந்த மக்களை பார்த்து பயப்பட வேண்டாம், ஆனால் ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக ஒன்றுபடுமாறு கேட்டுக் கொண்டார்.
அவர் பேசியதாவது:- “நாட்டில் நிலைமை சரியாக இல்லை. நாட்டில் நடந்து வரும் பிரித்து ஆட்சி செய்யும் கொள்கையும், தனிமைப்படுத்தும் அரசியலும் சரியல்ல.
நீங்கள் பயப்படாதீர்கள், தொடர்ந்து போராடுங்கள். உங்களை வருத்தப்படுத்தும் எதையும் எனது கட்சியோ அல்லது எனது அரசாங்கமோ அல்லது நானோ செய்யமாட்டேன்” என்றார்.
Related Tags :
Next Story