2024ம் ஆண்டு மம்தா பிரதமராவார், மம்தாவின் மருமகன் மே.வங்க முதல் மந்திரியாவார் - திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி!


2024ம் ஆண்டு மம்தா பிரதமராவார், மம்தாவின் மருமகன் மே.வங்க முதல் மந்திரியாவார் - திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி!
x
தினத்தந்தி 3 May 2022 12:08 PM GMT (Updated: 3 May 2022 12:08 PM GMT)

மேற்குவங்காளத்தின் தற்போதைய முதல் மந்திரியான மம்தா பானர்ஜி 2024ம் ஆண்டு பிரதமராக பதவியேற்பார்

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தின் தற்போதைய முதல் மந்திரியான மம்தா பானர்ஜி 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமராகவும், 2024ல் அபிஷேக் பானர்ஜி மேற்குவங்காள முதல் மந்திரியாகவும் பதவியேற்பார்கள் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபரூபா தாஸ் டுவிட்டரில் பதிவிட்டார். 

ஆனால், அவர் தனது பதிவை இட்ட ஒரு மணி நேரத்திற்குள், அந்த டுவீட்டை நீக்கிவிட்டார். இந்த விவகாரம் மேற்கு வங்காள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் நேற்று இதேபோன்றதொரு பதிவை டுவிட்டரில் இட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் பதிவிட்டதாவது, 

“2036 ஆம் ஆண்டு மேற்குவங்காளத்தின் முதல் மந்திரியாக அபிஷேக் பானர்ஜி பதவியேற்பார். முன்னாள் முதல் மந்திரி ஜோதிபாசுவின் (நீண்ட காலம் முதல் மந்திரியாக இருந்த) சாதனையை முறியடித்து, மம்தா பானர்ஜி இந்தியாவிலேயே ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்துவார்” என்று பதிவிட்டார். 

இந்நிலையில், 2036 வரை காத்திருக்க வேண்டாம், 2024ம் ஆண்டே அபிஷேக் பானர்ஜி(மம்தாவின் மருமகன்) மேற்குவங்காளத்தின் முதல் மந்திரியாக பதவியேற்பார் என்று தெரிவித்துவிட்டு உடனேயே நீக்கியும் விட்டார் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபரூபா தாஸ்.


Next Story