‘பிரித்தாளும் அரசியல் நாட்டுக்கு நல்லதல்ல’ ரம்ஜான் தொழுகை நிகழ்ச்சியில் மம்தா பேச்சு


‘பிரித்தாளும் அரசியல் நாட்டுக்கு நல்லதல்ல’ ரம்ஜான் தொழுகை நிகழ்ச்சியில் மம்தா பேச்சு
x
தினத்தந்தி 4 May 2022 2:49 AM IST (Updated: 4 May 2022 2:49 AM IST)
t-max-icont-min-icon

கொல்கத்தாவின் ரெட் ரோடில் சுமார் 14 ஆயிரம் பேர் பங்கேற்ற ரம்ஜான் தொழுகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

கொல்கத்தா, 

கொல்கத்தாவின் ரெட் ரோடில் சுமார் 14 ஆயிரம் பேர் பங்கேற்ற ரம்ஜான் தொழுகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்று பேசியதாவது:-

‘இரண்டாண்டுகால இடைவெளிக்கு பின், புகழ்பெற்ற ரெட் ரோடு ரம்ஜான் தொழுகை நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது நம் நாட்டின் சூழ்நிலை சரியாக இல்லை. இப்போது நடைபெறும், பிரித்தாளும், தனிமைப்படுத்தும் அரசியல் நாட்டுக்கு நல்லதல்ல.

இந்து, முஸ்லிம்கள் இடையே பிளவை ஏற்படுத்த சில பொறாமைக்காரர்கள் தொடர்ந்து பொய்களை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அதற்காக அஞ்சாமல் போராட வேண்டும்.

நாட்டை பிரிக்கவும், மக்களை ஒடுக்கவும் முயலும் சக்திக்கு எதிராக போராட அனைவரும் ஒன்றுபட வேண்டும். நாம் அனைவரும் இணைந்து அந்த சக்தியை நாட்டில் இருந்து அகற்ற வேண்டும். நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள், என் மீது நம்பிக்கை வையுங்கள். இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் என்று பார்க்காமல் மக்கள் அனைவரின் நலத்துக்காக நான் போராடுவேன். அதற்கான சக்தியை உங்களிடம் இருந்தே பெறுவேன். உங்களின் நல்ல நாட்கள் வரும். நான் பொய்யான ‘அச்சே தின்’ (நல்ல நாள்) பற்றிச் சொல்லவில்லை. உண்மையான ‘அச்சேன் தின்’ பற்றி சொல்கிறேன்.’

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story