படிப்பதற்கு மெழுகுவர்த்தி ஏற்றிய போது சோகம் - மாணவி ஆடையில் தீ பிடித்து பலி..!
கொல்லம் அருகே மெழுகுவர்த்தி ஏற்றிய போது ஆடையில் தீப்பிடித்து படுகாயமடைந்த பிளஸ் டூ மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
கொல்லம்:
கேரளா மாநிலம், கொல்லம் அருகே உள்ள சாஸ்தாம்கோட்டை பகுதியை சேர்ந்தவர் அணில்-லீனா தம்பதி. அணில் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டார். தாய் லீனா ரயில்வே நிர்வாகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் அர்ச்சனா (17). இங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
நேற்று தாய் லீனாவுக்கு இரவு நேர பணி என்பதால் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் மகள் அர்சனா மட்டும் இருந்துள்ளார். இரவு 8 மணியளவில் இந்த பகுதி முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டது. மின்சாரம் இல்லாததால் படிப்பதற்காக அங்கிருந்த மெழுகுவர்த்தி அர்சனா ஏற்றினார்.
அப்போது கையிலிருந்து தவறி விழுந்த மெழுகுவர்த்தி அர்சனாவின் உடல் மீது விழுந்தது. அவள் உடுத்தியிருந்த ஆடை விரைவில் தீபிடித்த கொள்ளும் வகையைச் சேர்ந்தது. இதனால் தீ மளமளவென்று ஆடையில் பிடித்து எரிய தொடங்கியது.
அப்போது வலியால் கத்திய அர்ச்சனாவை அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு சாஸ்தாம் கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சாஸ்தாம்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story