5 வயது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
5 வயதான வளர்ப்பு மகளை பல முறை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோஹிமா,
நாகலாந்து மாநிலம் கோஹிமா மாவட்டத்தை சேர்ந்த நபர் தனது 5 வயது வளர்ப்பு மகளை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கோஹிமா மாவட்ட போக்சோ கோர்ட்டில் விசாரிக்கபப்ட்டு வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வளர்ப்பு மகளை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்கோ கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், குற்றவாளிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தது.
அபராதத்தை செலுத்த தவறும்பட்சத்தில் மேலும் ஒருமாதம் சிறை தண்டனையை அனுபவிக்கவும் கோர்ட்டு உத்தரவிட்டது.
Related Tags :
Next Story