மத்திய பிரதேசத்தில் ரூ.2 ஆயிரம் வரை விலை போகும் நூர்ஜகான் மாம்பழம்
ஆப்கானிஸ்தானை பூர்வீகமாக கொண்ட ஒரு வகை மாம்பழம், நூர்ஜகான். 1 அடி வரை நீளம் கொண்ட இந்த மாம்பழங்கள் மிகவும் ருசியானவை.
இந்தூர்,
ஆப்கானிஸ்தானை பூர்வீகமாக கொண்ட ஒரு வகை மாம்பழம், நூர்ஜகான். 1 அடி வரை நீளம் கொண்ட இந்த மாம்பழங்கள் மிகவும் ருசியானவை. மத்திய பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கத்திவாடாவில் ஒருசில எண்ணிக்கையில் காணப்படும் இந்த மரங்களில் இந்த ஆண்டு கணிசமான மாங்காய்கள் காணப்படுகின்றன.
அடுத்த மாதம் தொடக்கத்தில் பழுத்து விற்பனைக்கு தயாராகும் இந்த பழங்கள் ஒவ்வொன்றும் ரூ.1,000 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்கப்படும் என அதன் உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த மரங்களை வளர்த்து வரும் ஷிவ்ராஜ் சிங் ஜாதவ் என்பவர் கூறுகையில், ‘என்னுடைய 3 மரங்களில் இந்த ஆண்டு 250 காய்கள் வரை உள்ளன. ஜூன் 15-ந்தேதிக்குள் இவை விற்பனைக்கு தயாராகி விடும். ஒவ்வொன்றும் அதிகபட்சமாக 4 கிலோ வரை எடையுடன் காணப்படுகின்றன’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மாம்பழம் ஒவ்வொன்றும் சராசரியாக 3.80 கிலோ வரை இருந்ததாக கூறிய அவர், அவை ரூ.500 முதல் ரூ.1,500 வரை விலை போனதாக தெரிவித்தார். அதேநேரம் இந்த ஆண்டு மாம்பழம் ஒன்றை ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் விற்பனை செய்ய இருப்பதாக கூறினார்.
Related Tags :
Next Story