தொழில் அதிபர் சேகர் ரெட்டி மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து: சுப்ரீம் கோர்ட்

தொழில் அதிபர் சேகர் ரெட்டி மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து: சுப்ரீம் கோர்ட்
x
தினத்தந்தி 5 May 2022 6:03 AM GMT (Updated: 5 May 2022 6:03 AM GMT)

தொழில் அதிபர் சேகர் ரெட்டி மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

புதுடெல்லி,

தொழில் அதிபர் சேகர் ரெட்டி மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.  

கடந்த 2016- ஆம் ஆண்டு சேகர் ரெட்டி,  அவரது உறவினர் மற்றும் ஆடிட்டர் வீடு அலுவலங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அந்த சோதனையில் ரூ. 147- கோடிக்கு பழைய 500, 1000 நோட்டுகள், புதிய 2000 நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. 178- கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான 24 நாளில் 34 கோடிக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் தாள் கிடைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் சேகர் ரெட்டி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. 

அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், சேகர் ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்  அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

Next Story