8,000 மீட்டருக்கு மேல் உள்ள ஐந்து சிகரங்களில் ஏறி சாதனை படைத்த முதல் இந்தியப் பெண்மணி !


image instagrammed by priyankamohite 11
x
image instagrammed by priyankamohite 11
தினத்தந்தி 5 May 2022 9:48 PM IST (Updated: 5 May 2022 9:48 PM IST)
t-max-icont-min-icon

8,000 மீட்டருக்கு மேல் ஐந்து சிகரங்களை அடைந்த முதல் இந்தியப் பெண்மணி என்ற சாதனையை பிரியங்கா மோஹிதே பெற்றார்.

மும்பை,

 மேற்கு மராட்டியத்தின் சதாரா பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா மோஹிதே. சிறுவயதில் இருந்தே மலையேறுவதில் ஆர்வம் கொண்ட இவர், பல சிகரங்களை அடைந்து சாதனை படைத்துள்ளார்.

இந்த நிலையில், இவர் இன்று இமயமலையில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான மூன்றாவது சிகரம் என்ற பெருமையை கொண்ட காஞ்சன்ஜங்கா  சிகரத்தை (8,586 மீ)  வெற்றிகரமாக அடைந்தார். இதன் மூலம் 8,000 மீட்டருக்கு மேல் உள்ள ஐந்து சிகரங்களை அடைந்த முதல் இந்தியப் பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இவர் இதற்கு முன்பு கடந்த 2013 ஆம் ஆண்டு உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தையும் (8,849 மீ), 2018 இல் இமயமலையில் அமைந்துள்ள லோட்சே மலையையும் (8,516 மீ), மவுண்ட் மகாலு (8,485 மீ)  மற்றும் ஏப்ரல் 2021 இல், உலகின் 10 வது மிக உயரமான மலை சிகரமான அன்னபூர்ணா மலையையும் (8,091 மீ) ஏறி சாதனை படைத்திருந்தார்.

இவரது அசாத்திய திறமைக்காக கடந்த 2020 ஆம் ஆண்டில் இவருக்கு டென்சிங் நார்கே சாகச விருது  வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


Next Story