ஆம்புலன்ஸ் தர மறுப்பு; உயிரிழந்த 2 வயது பெண் குழந்தை உடலை பைக்கில் கொண்டு சென்ற உறவினர்கள்
ஆந்திர பிரதேசத்தில் உயிரிழந்த 2 வயது பெண் குழந்தை உடலை சுமந்து செல்ல ஆம்புலன்ஸ் தர மறுத்த நிலையில், பைக்கில் கொண்டு செல்லப்பட்டது.
திருப்பதி,
ஆந்திர பிரதேசத்தின் திருப்பதி மாவட்டத்தில் குழிக்குள் விழுந்த 2 வயது பெண் குழந்தையை தூக்கி கொண்டு அதன் குடும்பத்தினர் மருத்துவமனை ஒன்றுக்கு சிகிச்சை அளிக்க சென்றுள்ளனர். அதனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டது என உறவினர்களிடம் தெரிவித்து உள்ளனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள் குழந்தையின் உடலை சுமந்து செல்ல ஆம்புலன்ஸ் தரும்படி கேட்டு உள்ளனர். ஆனால், இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் வராது. அதற்கு தங்களது விதியில் இடமில்லை என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஆம்புலன்ஸ் தரமறுத்த நிலையில், உறவினர்கள் உயிரிழந்த குழந்தையின் உடலை பைக் ஒன்றில் வைத்து கொண்டு திரும்பி சென்றுள்ளனர். இதனை திருப்பதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரமேஷ்வர் ரெட்டி செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தி உள்ளார்.
எனினும், அந்த குடும்பத்தினர் இதுபற்றி போலீசில் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story